வயோதிப பெண் அடித்துக் கொலை: மருமகன் தப்பியோட்டம்

காலி அளுத்வல பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றில் வயோதிபப் பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கோனபினுவல பகுதியை சேர்ந்த வீட்டில் வசித்து வந்த 76 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

கொலை செய்யப்பட்ட பெண் திருமணமாகாதவர் எனவும் அவர் பல வருடங்களாக தனது சகோதரனின் மகனுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், பொசன் போயா தினத்தன்று குறித்த பெண் தடியால் அடித்து கொல்லப்பட்டுள்ளதுடன் பெண் கொல்லப்பட்ட இடத்தில் அவரை தாக்குவதற்கு பயன்பட்ட தடி ஒன்றும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை சம்பவமானது கடந்த இரண்டு நாட்களுக்குள் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மருமகன் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கோனபினுவல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்