பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் ஈழத் தமிழ்ப் பெண்

யாழ்ப்பாணம் – இளவாலையைப் பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் பிரித்தானியாவின் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

கடந்த 20 வருடங்களாக சட்டன் பகுதியில் வசித்துவரும் அவர், சட்டன் மற்றும் செம் ஆகியவற்றிற்கான தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

லிபரல் ஜனநாயக கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கன்சர்வேட்டிவ் கட்சியிலேயே அவர் போட்டியிடுகிறார்.

பெற்றோரின் இழப்பிற்குப் பின்னர் கிருஷ்ணி ரிஷிகரன் தனது உறவினருடன் லண்டனுக்குச் சென்று அங்கு ஒரு சிறுவர் இல்லத்தில் வசித்து வந்தார்.

கசப்பான அனுபவங்களின் மத்தியில் தான் லண்டன் வந்ததாகவும், தற்போது லண்டனில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் மற்றும் சமூக மேம்பாட்டு மையமொன்றிலும் பணிபுரிவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்