மிகவும் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்த பெண் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டார்.
இரத்மலானையைச் சேர்ந்த 54 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.
இதன்போது ப்ரீகாபலின் (PREGABALIN) என்ற 500 போதைப்பொருள் மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை கல்கிஸை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்