இந்தியாவிலிருந்து போதைப்பொருள் கடத்தல் முயற்சி: 9 பேர் கைது

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தவிருந்த 3 இலங்கையர்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 40 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான மெத்தம்ஃபெட்டமைன் என்ற போதைப்பொருட்கள் அந்நாட்டு அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.

சென்னைப் பிராந்தியத்துக்குப் பொறுப்பான போதைப்பொருள் கட்டுப்பாட்டுச் சபையின் அதிகாரிகள் அவர்களை கைது செய்ததன் ஊடாக, மிகப்பெரிய போதைப்பொருள் கடத்தல் குழு ஒன்று பிடிபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

புழல் மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒருவர் இந்தக் குழுவை வழிநடத்தி வந்ததுடன் சந்தேக நபர்கள் கடந்த ஜூன் மாதம் 11ஆம் திகதி முதல் கட்டம் கட்டமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்