டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து, பிரதான வீதியை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த பாடசாலை மாணவர்கள் உட்பட 34 பேர் காயமடைந்தனர்.
குறித்த விபத்தில் ஹட்டனைச் சேர்ந்த எஸ். சிவபாலன் (வயது 70) என்பவர் உயிரிழந்தார், மேலும் 17 ஆண்களும் 14 பெண்களும் காயமடைந்ததாகவும், அவர்களில் இரண்டு சிறு குழந்தைகளும் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .
அதிவேகமாகச் சென்று கொண்டிருந்த பேருந்து, மற்றொரு பேருந்துக்கு வழிவிட முயன்றபோது பிரதான வீதியை விட்டு விலகி, சுமார் 25 அடி ஆழமுள்ள செங்குத்தான பள்ளத்தில் விழுந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்த முதற்கட்ட விசாரணையில், பேருந்தின் சாரதியின் கவனயீனத்தால் தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.