அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குடியரசுக் கட்சியின் தேசிய மாநாட்டில் இன்றைய தினம் திங்கட்கிழமை பங்கேற்கவுள்ளார்.
விஸ்கான்ஸ் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் இடம்பெறவுள்ள குறித்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தற்போது சென்றுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த மாநாட்டின்போது, டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகைக்கான தமது துணையைப் பெயரிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரக் கூட்டத்தின்போது குடியரசு கட்சியின் வேட்பாளரான முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்