கிழக்கு மாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கை மற்றும் மாலை தீவுக்கான கனேடிய உயர் ஸ்தானிகர் இசபெல் மார்ட்டின் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானியர் அன்ட்ரூ பற்ரிக் ஆகியோர், திருகோணமலை மாநகர முதல்வர் மற்றும் பிரதி முதல்வர் ஆகியோரை நேற்று புதன்கிழமை திருகோணமலையில் மாநகர சபை முதல்வர் அலுவலகத்தில் சந்தித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டனர்.

இச்சந்திப்பில் திருகோணமலை மாநகர முதல்வர் க.செல்வராஜா, பிரதி முதல்வர் மௌசூம் மற்றும் மாநகர ஆணையாளர் உ.சிவராசா உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது திருகோணமலை மாநகரத்தின் தேவைகள் எதிர்கால அபிவிருத்தி நாட்டின் தற்போதைய அரசியல் சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும், மாநகர உட்கட்டமைப்பு வசதிகள், சுற்றுலா அபிவிருத்தி, இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் தொடர்பாகவும் உயர்ஸ்தானியர்களின் கவனத்திற்கு கொண்டு வந்து கலந்துரையாடப்பட்டது.
