உயர்நீதிமன்றினால் நாடாளுமன்ற உறுப்புரிமை இரத்துச் செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளது.
நேற்று முன் தினம் புதன்கிழமை குறித்த வாக்குமூலத்தைப் பெற்றதாக பொலிஸ்துறை பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அவர் பயன்படுத்திய கடவுச்சீட்டு, அடையாள அட்டை மற்றும் வேறு ஆவணங்கள் தொடர்பிலும் இதன் போது டயனா கமகேவிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










