இரசிகர்களை தள்ளிவிட்ட தனுஷின் காவலர்: வைரலாகும் காணொளி

நடிகர் நாகர்ஜுனா சில தினங்களுக்கு முன்பு விமானநிலையத்திற்கு வந்தபோது அவர் அருகில் வந்த நபரை பாதுகாவலர் தள்ளிவிட்ட காணொளி வைரல் ஆனது.

நடிகர் தனுஷும் நாகர்ஜுனாவுக்குப் பின்னால் நடந்து வந்த நிலையில், அந்த சம்பவத்தை பற்றி எந்த எதிர்வினையையும் காட்டவில்லை.

இது பெரிய சர்ச்சை ஆனதை தொடர்ந்து நாகர்ஜுனா இதுபோல இனிமேல் நடக்காது என மன்னிப்பு கோரி இருந்தார்.

இந்நிலையில் தனுஷ் இன்று ஜுஹு காடற்கரைக்கு படப்பிடிப்புக்காக வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது ரசிகர்கள் சிலர் தொலைபேசியில் அவரை புகைப்படம் எடுக்க முற்பட்டு இருக்கின்றனர்.

அவர்களை தனுஷின் பாதுகாவலர்கள் தள்ளிவிட்டதாக காணொளி வெளியாகி வைரல் ஆகி இருக்கிறது.

நெட்டிசன்களும் தனுஷை விமர்சித்துப் பதிவிட்டு வருகின்றனர். பொது இடத்தில் படப்பிடிப்பு நடக்கும்போது மக்களை இப்படி தான் நடத்துவீர்களா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்