தம்மிக்க நிரோஷன நேற்று முன்தினம் செவ்வாய் கிழமை சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், விசாரணைகளை மேற்கொள்ளும் அம்பலாங்கொடை பொலிஸார் இன்று வியாழக்கிழமை காலை குறித்த சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
தொலைபேசி தரவுகள் மற்றும் சிசிடிவி காணொளிக் காட்சிகளின் அடிப்படையில் குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
2002ஆம் ஆண்டு 19 வயதிற்குட்பட்ட இலங்கை இளையோர் கிரிக்கெட் அணியின் தலைவராகச் தம்மிக்க நிரோஷன செயற்பட்டமை குறிப்பிடதக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்