ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை 1,700 ரூபாய் நாளாந்த வேதனத்தை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பகுதியில் உள்ள பெருந்தோட்ட தொழிலாளர்களே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.
அரச உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்ட சகல தரப்பினருக்கும் வேதனம் அதிகரிக்கப்படுகின்ற நிலையில் தங்களுக்கும் வேதனம் அதிகரிக்கப்பட வேண்டும் என அவர்கள் இதன் போது வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










