காட்டு யானை தாக்கியதில் வீடுகள் சொத்துக்களுக்கு சேதம்

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை மாவட்டத்தில் நேற்று செவ்வாய் கிழமை இரவு காட்டு யானை தாக்கியதில் வீடு மற்றும் உடமைகள் சேதமாக்கப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ள சிரிமங்களபுர மெதகம கிராமத்திலே காட்டு யானைகள் சேதம் விளைவித்துள்ளது.

இவ்வருடத்தில் மாத்திரம் பத்துக்கும் மேற்பட்ட வீடுகள் யானை தாக்குதலுக்கு இலக்காகி சேதமாக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த வாரம் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தர் ஒருவர் யானை தாக்கியதில் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனவே இக்காட்டு யானை தொல்லையில் இருந்து தங்களை பாதுகாக்குமாறு அப்பிரதேச மக்கள் உரிய அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்