தொடரும் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதிகளுக்கிடையிலான மோதல்

-பதுளை நிருபர்-

ஹொப்டன் பகுதியில் தனியார் மற்றும் அரச பேருந்தின் சாரதி நடத்துநர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லுணுகலை பொலிஸார் தெரிவித்தனர்.

பிபிலை இ.போ.சபைக்கு சொந்தமான பேருந்து தம்பிடியவிலிருந்து பதுளை நோக்கி இன்று ஞாயிற்று கிழமை காலை பயணித்து கொண்டிருந்த வேளையில் லுணுகலையில் இருந்து பசறை நோக்கி பயணித்து கொண்டிருந்த தனியார் பேருந்துடன் நேரம் தொடர்பான வாக்குவாதம் முற்றி ஹொப்டன் பகுதியில் வைத்து கைகலப்பாக மாறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது அரச பேருந்தின் நடத்துநர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் தனியார் பேருந்தின் சாரதியும் நடத்துநரும் லுணுகலை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தனியார் பேருந்தின் உரிமையாளர் மற்றும் ஒரு நபரும் லுணுகலை ஹொப்டன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

பதுளை பொலிஸ் பிரிவிற்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் ஆலோசனையின் பேரில் லுணுகலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோப பிரியந்த சந்திரசேகர தலைமையில் பொலிஸ் குழுவொன்று விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்