-பதுளை நிருபர்-
ஹல்துமுல்ல பகுதியில் இடம்பெற்ற திருமண நிகழ்வொன்றின் போது ஏற்பட்ட மோதலில் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்தவர்களை ஹல்துமுல்ல மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்ததன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக தியத்தலாவை ஆரம்ப வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது
மோதலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர் இருவரையும் பண்டாரவளை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
பண்டாரவளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரதீப் களுபஹனவின் பணிப்புரையின் பேரில், ஹல்துமுல்ல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜயரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்