அநுராதபுரம், திருகோணமலை வீதியில் ஹொரவப்பொத்தானை யான் ஓயா பாலத்தின் பாதுகாப்பு வேலியில் மோதி நேற்று சனிக்கிழமை வாகனம் விபத்துக்குள்ளானதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரத்திலிருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த சொகுசு காரொன்றே சாரதியின் தூக்க கலக்கம் காரணமாக இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழுவினர் திருகோணமலை பகுதிக்குத் தனிப்பட்ட தேவைக்காகச் சென்ற போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த குழுவில் இருந்த பெண் ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்