கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பேருந்து விபத்து : 15 பேர் காயம்

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் வெவல்தெனிய பிரதேசத்தில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பேருந்து விபத்தில் 15 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் வத்துப்பிட்டிவல மற்றும் வறக்காப்பொல வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்