எருமையை திருட்டு: இருவர் துப்பாக்கிகளுடன் கைது

ஒரு இலட்சத்து 75 ஆயிரம் ரூபா பெறுமதியான எருமை மாடு ஒன்றை திருடி இறைச்சிக்காக வெட்டிய இரண்டு சந்தேக நபர்கள் தம்பலகல பொலிஸாரால் நேற்று புதன் கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மாத்தளை தம்பலகல பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 38 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடமிருந்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்