யாழ். ஊர்காவற்றுறை பிரிவிற்குட்பட்ட புங்குடுதீவு – மடத்துவெளி, வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு – மடத்துவெளி, 8ஆம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துஜா என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்