திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரி கவனயீர்ப்பு

-கிண்ணியா நிருபர்-

திருக்கோணேச்சர ஆலயத்தின் புனித தன்மையை பாதுகாக்க கோரிய கவனயீர்ப்பொன்று இன்று திங்கட்கிழமை திருகோணமலை நகர சபைக்கு அண்மையில் உள்ள திருக்கோனேஸ்வர ஆலய பரிபாலன சபைக்கு முன்னால் இடம் பெற்றது.

குறித்த கவனயீர்ப்பினை திருக்கோணேஸ்வர ஆலய பரிபாலன சபையினர், தொண்டர்கள் மற்றும் சைவ அடியார்கள் இணைந்து ஏற்பாடு செய்தனர்.

திருக்கோணேஸ்வர ஆலய அண்மித்த கடைத் தொகுதியில் கசிப்பு விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைதாகியதையடுத்து அதனை சீல் வைக்கச் சென்ற திருகோணமலை நகர சபை ஊழியர் மீது தாக்குதல் நடாத்தப்பட்டது இதனை கண்டித்தும் புனித தன்மையை பாதுகாக்க அரச துறை அதிகாரிகள் முன்வர வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தனர்.

இப் புனித ஆலய சுற்றுச் சூழலை பாதுகாக்கவும் சட்ட ரீதியாக கடையை சீல் வைக்க சென்றவரை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது எனவும் இதன் போது தென்காயிலை ஆதினம் அகத்தியர் அடிகளார் தெரிவித்தார்.

இதில் ஆலய பரிபாலன சபை தலைவர் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்