பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கி அவரது உடைமைகள் கொள்ளை

-பதுளை நிருபர்-

மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து 3 இலட்சத்து 30 ஆயிரம் ரூபா பெறுமதியான உடமைகள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் 5 சந்தேகநபர்கள் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 30 மற்றும் 42 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும்,  துனுவாங்கிய பகுதியை சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்

மிரிஹான பொலிஸில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் விடுமுறையில் துனுவாங்கியாவில் உள்ள அவரது வீட்டிற்கு வந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

பொலிஸ் அதிகாரியை தாக்கியவர்கள் பொலிஸ் அதிகாரியின் கழுத்தில் இருந்த இரண்டு தங்க சங்கிலியையும் எழுபதாயிரம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி மற்றும் இருபதாயிரம் ரூபா பணத்தையும் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் தற்போது பதுளை போதனா வைத்தியசாலையின் சிகிச்சை பெற்று வருவதாக வைத்திய சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

பதுளை பொலிஸ் பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த, பொலிஸ் அத்தியட்சகர் புத்திக குணசேகர மற்றும் பதுளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரபோபா டி.எம்.ரத்நாயக்க ஆகியோர் குற்றப் புலனாய்வுப் பிரிவின் பதில் நிலைய கட்டளைத் தளபதி திரு. உபோப குமாரரத்ன தலைமையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

சந்தேக நபர்களை இன்று செவ்வாய்க்கிழமை நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்