வடக்கிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கவுள்ளார்.
யாழ்ப்பாணம், தந்தை செல்வா கலையரங்கில் எதிர்வரும் சனிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி தலைமையில் 400 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
நியமனம் பெறவுள்ள பட்டதாரிகளுக்கான அழைப்புக் கடிதங்கள் வடமாகாண கல்வி அமைச்சினால் இன்று திங்கட்கிழமை முதல் அனுப்பி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்