உள்ளூராட்சி நிறுவனங்களில் பணி புரியும் பணியாளர்களுக்கு நிரந்தர ஓய்வூதியத்துடன் நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து பிரதமரும், பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களின் அமைச்சருமான தினேஷ் குணவர்தனவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், இந்த நியமனக் கடிதங்களை 2024 ஜூலை மாதமளவில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன் மூலமாக, நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி சபைகள், நகர சபைகள் மற்றும் மாநகர சபைகளில் தற்காலிக, சாதாரண, மாற்று, ஒப்பந்தம் மற்றும் சலுகையின் அடிப்படையில் பணியாற்றுகின்ற 8,435 பேர் நிரந்தர நியமனம் பெறவுள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்