ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் சட்டத்தரணி ஒருவரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு நாளை உயர் நீதிமன்றில் பரிசீலிக்கப்படவுள்ளது.
சட்டத்தரணி அருண லக்சிறி உனவட்டுனவினால் இந்த அடிப்படை உரிமைகள் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
19ஆவது அரசியலமைப்புத் திருத்தம் முறையாக நிறைவேற்றப்படாததால், சர்வஜன வாக்கெடுப்பு மூலம் அதனை அங்கீகரிக்க முன்னதாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதால் அரசியலமைப்பு மீறப்படும் எனத் தீர்ப்பளிக்கக் கோரி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த மனுவை பரிசீலிக்க பிரதம நீதியரசர் உள்ளிட்ட மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம் நாளைக் கூடவுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்