தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 80 வயது முதியவர் கணித பாடத்தில் தோற்றியுள்ளமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது.
பாணந்துறை – கிரிபெரிய பிரதேசத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரியான நிமல் சில்வா என்கிற முதியவரே இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றியுள்ளார்.
கல்விக்கு வயது ஒரு தடை இல்லை என்பார்கள். இதற்கமைய குறித்த முதியவர் பரீட்சையில் தோற்றியுள்ளமை கல்வி மீதான அவரது ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் குறித்த முதியவருக்கு பலரும் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்










