முன்னாள் எதிர்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் சிரேஷ்ட தலைவரும் காலஞ் சென்ற நாடாளுமன்ற உறுப்பினருமான அமரர் இராஜவரோதயம் சம்மந்தனின் இறுதி கிரியைகள் திருகோணமலையில் உள்ள இந்து மயானத்தில் இன்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெறவுள்ள நிலையில் அதற்கான ஏற்பாடுகள் இடம் பெற்று வருவதுடன் பெருந்திரளான மக்கள் அஞ்சலி செலித்தியும் வருகின்றனர்.
அரசியல் பிரமுகர்கள், முப்படைகளின் உயரதிகாரிகள், என பலரும் திருகோணமலையில் உள்ள அன்னாரது இல்லத்தில் பூதவுடல் வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டு வருகின்றது.
இறுதி கிரியைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ,பாரதிய ஜனதா கட்சி தமிழக தலைவர் அண்ணாமலை பங்கேற்கவுள்ள நிலையில் பலத்த பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு திருகோணமலை நகர் முழுதும் ஆழ்ந்தல் இரங்கல் தெரிவித்து அமரர் இரா. சம்மந்தனின் உருவப்படம் பொறித்து தொங்கவிடப்பட்டுள்ளது.
இதில் தென்னிலங்கையை சேர்ந்த அரசியல் பிரமுகர்கள், வடகிழக்கு மலையகத்தை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் என பலரும் மேலும் கலந்து கொள்ளவுள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை உடல் நலக்குறைவு காரணமாக கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் அமரர் இரா. சம்பந்தன் இயற்கை எய்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்