வாகன இறக்குமதி அனுமதியில் பாரபட்சம் என குற்றச்சாட்டு

தனிப்பட்ட இலாபத்திற்காக வாகன இறக்குமதி முறைமையை முன்னெடுக்கும் முயற்சிகளை காணக்கூடியதாக உள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சில தரப்பினரால் வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுதல் மற்றும் சில அமைச்சுகளுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படுவதன் காரணமாக தங்களுக்கு கடும் அநீதி இழைக்கப்படுவதாக அந்தச் சங்கத்தின் செயலாளர் அரோஷ ரொட்ரிகோ தெரிவித்துள்ளார்.

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த வாய்ப்புள்ள போதிலும் அத்தகைய செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்