ஆடுகளை பயன்படுத்தி காட்டுத்தீயை கட்டுப்படுத்த நடவடிக்கை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் காட்டுத்தீயை கட்டுப்படுத்துவதுவதற்கு ஆடுகளை பயன்படுத்தும் முறையை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

1980ம் ஆண்டிலிருந்து காட்டுத்தீயை கட்டுப்படுத்த ஆடுகளை பயன்படுத்தும் யுக்தி அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், எளிதில் பற்றும் நிலையில் உள்ள புதர்களையும், தாவரங்களையும் இந்த ஆட்டுமந்தைகள் மேய்ந்துவிடுவதால் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் பெருமளவு குறைவடைவதாக தெரிவிக்கப்படுகின்றது.