மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ஞாயிற்றுகிழமை இடம்பெற்ற விபத்தில் சொத்துக்களுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளது.
கல்முனை பகுதியிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த தனியாருக்கு சொந்தமான எரிபொருள் வவுசர் அதிகாலை 3.30 மணியளவில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகியே விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் எரிபொருள் வவுசரின் முன் பகுதி பலத்த சேதமடைந்துள்ளதுடன் வீதியோரமிருந்த தனியார் வளாகத்தின் மதில்ப்பகுதியும் சேதத்துக்குள்ளாகியுள்ளதுஃ
மேலும் இலங்கை ரெலிக்கொம் தொலைத்தொடர்பு வலையமைப்பின் தூண்கள் விபத்தின் போது உடைக்கப்பட்டு அப்பிரதேச தொலைத்தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்