மனிதன் கழிவு என்று குப்பைத் தொட்டிகளில் வீசும் பொருட்களை விற்று ஒரே ஆண்டில் 56.20 இலட்சம் ரூபாயை சம்பாதித்துள்ள இளைஞரின் செய்தி வைரலாகி வருகிறது.
அவுஸ்திரேலியாவின் சிட்னியிலுள்ள குப்பைக் குவியல்களில் காணப்படிகின்ற மதிப்புமிக்க பொருட்களைச் சேகரித்து ரூ.56.20 லட்சத்தை கடந்த வருடம் லியோனார்டோ அர்பானோ சம்பாதித்துள்ளார்.
அது மட்டுமின்றி, இவர் குப்பைக் குவியல்களிலிருந்து குளிர்சாதனப் பெட்டி, அலமாரி, படுக்கைகள் போன்ற பெரிய பொருட்களையும் தங்க நகைகளையும் அவர் கண்டுபிடித்துள்ளார்.
ஒவ்வொரு நாளும் காலை உணவுக்கு சாப்பிட்ட பின்னர், அவர் தன்னுடைய சைக்கிள் அல்லது காரில் சிட்னி நகரின் தெருக்களில் குப்பைக் குவியல்களைத் தேடுவாரென்றும், அதிலிருந்து அவர் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு விடயங்களைக் கண்டுபிடிப்பாரென்றும் கூறப்படுகின்றது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்