காட்டு யானை தாக்கியதில் இளைஞன் பலி

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.30 மணியளவில் காட்டு யானை தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

பெலிகல்ல மஹியங்கனை பகுதியை சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்தனர்.

காட்டு யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த குறித்த இளைஞனை மஹியங்கனை ஆரம்ப வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது இடைநடுவில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலம் மஹியாகனை ஆரம்ப வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்