ருவன்வெல்ல பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை உயிரிழந்த 4 வயது சிறுமியை, அவரது தாயாரே கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
யட்டியந்தோட்டை, கிரிபோருவ தோட்டப் பகுதியைச் சேர்ந்த தேவ்மி அமயா என்ற 4 வயதும் 10 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
குறித்த சிறுமி, நேற்றையதினம் அவர் வசிக்கும் பகுதியிலுள்ள கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போது சிறுமியின் தாயாரே சிறுமியைக் கிணற்றில் வீசிக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமியின் தாய் வாய் பேச முடியாத பெண் என்பதுடன், சுகவீனமுற்றிருந்த அவர் கரவனெல்ல வைத்தியசாலையில் பொலிஸ் பாதுகாப்பில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.
இந்நிலையில் சிறுமியின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மேலும் கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில், ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்