புத்தளம் மாவட்டத்தின் முந்தல் – பள்ளிவாசல்பாடு கடற்பிரதேசத்தில் இருந்து ஒரு தொகை மஞ்சள் நேற்று புதன் கிழமை மீட்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
வடமேற்கு கடற்படை கட்டளையின் புத்தளம் தம்பபண்ணி கடற்படை முகாமைச் சேர்ந்த கடற்படையினர் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் கடலில் இருந்து கரையை வந்தடைந்த டிங்கி இயந்திர படகு ஒன்றை பரிசோதனை செய்தனர்.
இதன்போது குறித்த டிங்கி இயந்திர படகில் 44 உர மூடைளில் அடைக்கப்பட்ட 1,373 கிலோ 700 கிராம் மஞ்சள் இருந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது குறித்த டிங்கி இயந்திர படகில் பயணித்த இருவர் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் கற்பிட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் என கடற்படையினர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்