Sri Lanka Tamil News Site

காட்டில் தொலைந்த உரிமையாளரை கண்டுபிடித்த நாய்

- Advertisement -

சேகரப்பா 55வயது, என்பவர் ஏழு வருடங்களாக டாமி என்ற நாயை வளர்த்து வந்தார். அவர் எங்கே சென்றாலும் அவருடன் சுற்றிக்கொண்டு இருந்துள்ளது. குடுமபத்தில் ஒரு உறுப்பினர் போலவே அந்த நாய் இருந்துள்ளது.

சேகரப்பா, எப்போதும் காலை 6 மணியளவில் காட்டிற்கு சென்று விறகு கொண்டு வருவது வழக்கம். 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதை அவர் செய்து வருகிறார். 6 மணிக்கு செல்பவர் காலை 10 மணிக்குள் காட்டில் இருந்து திரும்பி விட்டு அயனூரு நகரில் அவர் பணிபுரியும் ஹோட்டலுக்குச் செல்வது வழக்கம்.

- Advertisement -

அதேபோல் கடந்த சனிக்கிழமை காலையும் விறகு எடுத்துவர காட்டிற்குள் சென்றுள்ளார். 10 மணி தாண்டியும் வரவில்லை. குடும்பத்தினர் சந்தேகம் கொண்டு அக்கம் பக்கத்திடம் விசாரித்தனர். சேகரப்பாவின் நண்பர்கள் அக்கம் பக்கத்தினர் என்று சுமார் 50 பேர் காட்டின் ஒவ்வொரு பகுதியாக அவரைத் தேடியுள்ளார். ஆனால் அவரைக் கண்டுபிடிக்கவில்லை.

அதன் பின்னர் வழக்கமாக அவருடன் போகும் டாமியை கழற்றிவிட்டுள்ளனர். அது தனது மோப்ப சக்தி கொண்டு தனது உரிமையாளரைத் தேடி கண்டுபிடித்தது. அதன் குரைப்பு ஒலி கேட்டு மக்கள் வந்து பார்த்தபோது மரத்தின் கீழ் மயங்கிக் கிடந்த சேகரப்பாவைக் கண்டனர்.

மயக்கத்தில் இருந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவ பரிசோதனையில், வெப்பம் மற்றும் சோர்வு காரணமாக அவர் மயக்கமானதை மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

- Advertisement -

error: Alert: Content selection is disabled!!