மட்டக்களப்பு-ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மீராவோடை எல்லை வீதியிலுள்ள வீடொன்றில் 4 கால்களுடன் அபூர்வ கோழிக் குஞ்சு ஒன்று பிறந்துள்ளது.
வீட்டு உரிமையாளர் முகம்மட் நஸீர் என்பவர் ஏப்ரல் மாதம் 02 ஆம் திகதி 11 முட்டைகளை அடைகாக்க வைத்துள்ளார்.
அவ்வாறு அடைகாக்க வைத்த முட்டைகளில் நேற்று செவ்வாய்க்கிழமை 9 கோழிக் குஞ்சுகள் பிறந்துள்ளன.
அதில் ஒரு கோழிக் குஞ்சு 4 கால்களுடன் பிறந்துள்ளது.
கறுப்பு மற்றும் மஞ்சள் நிறம் கலந்து, ஆரோக்கியத்துடன் 4 கால்கள் கொண்ட அழகிய கோழிக் குஞ்சை பலரும் ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.