விசர்நாய் கடித்ததில் 4 வயது சிறுமி உயிரிழப்பு

கிளிநொச்சியைச் சேர்ந்த சிறுமியொருவர் விசர்நாய் கடிக்கு இலக்காகி, சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் புதன் கிழமை உயிரிழந்துள்ளார்.

கிளிநொச்சி – குமாரசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த 4 வயது சிறுமியே இதன் போது உயிர் இழந்துள்ளார்.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் குறித்த சிறுமி விசர்நாய் கடிக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இதேவேளை சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பயனின்றி நேற்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்