தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து 3 வயது குழந்தை பலி

கம்பஹாவில் வீட்டின் தண்ணீர் தொட்டியில் வீழ்ந்து நீரில் மூழ்கி 3 வயது குழந்தை உயிர் இழந்துள்ளது.

கிழக்கு மித்தெனிய முகவரியில் வசித்து வந்த சமரகோன் முதியன்சே என்பவரின் மகன் அயன் கோவிஜா (வயது – 3) என்ற குழந்தையே இவ்வாறு உயிர் இழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,

குறித்த குழந்தையின் தாய் உயிரிழந்த குழந்தை மற்றும் அவரது சகோதரரை குளிக்க வைப்பதற்காக ஆயத்தம் செய்த நிலையில் முதலாவதாக 9 வயது குழந்தையை குளிக்க வைத்து விட்டு வீட்டினுள் சென்றுள்ளார்.

இந்த நிலையில் உயிரிழந்த குழந்தை தண்ணீர் தொட்டிக்க அருகில் நின்றுள்ளது. பின்னர் தாய் தமது 3 வயது குழந்தையை குளிக்க வைப்பதற்காக வந்த போது குறித்த குழந்தை தண்ணீர் தொட்டியில் விழுந்துள்ளதை அவதானித்து அவரை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குழந்தை சிகிச்சை பலன் இன்றி உயிர் இழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்