
9 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 33 வயதுடைய குடும்பஸ்தர் கைது
-யாழ் நிருபர்-
கடந்த சில தினங்களுக்கு முன்னர், நெல்லியடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெல்லியடி – துன்னாலை பகுதியில் 9 வயதுச் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் புதன் கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
துன்னாலை பகுதியை சேர்ந்த 33 வயதுடைய திருமணமான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
