
78 வயதான மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை: 17 வயது மாணவன் கைது
பலாங்கொடை பிரதேசத்தில் 78 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொலை செய்த 17 வயதுடைய பாடசாலை மாணவனை எதிர்வரும் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பலாங்கொடை முகுனமலை பிரதேசத்தை சேர்ந்த எம்.எல். சிரியாவதி (வயது – 78) என்ற பெண்ணே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
கடந்த 27ஆம் திகதி குளிப்பதற்கு தொரவெல ஓயாவுக்கு சென்றிருந்த நிலையில், குறித்த ஓயாவில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பலாங்கொடை வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் வைத்தியர்களுக்கு மரணம் தொடர்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து பிரேத பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் பெண் பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கழுத்தையும் வாயையும் நெரித்து கொலை செய்யப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்