-மூதூர் நிருபர்-
கிண்ணியா அல் அக்சா கல்லூரியில் இன்று செவ்வாய் கிழமை காலை 32 மாணவர்களும் ஆசிரியர் ஒருவரும் குளவி கொட்டுக்கு இலக்காகி கிண்ணியா தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவது, இந்தப் பாடசாலையில் தொழில்நுட்ப பிரிவு கட்டடத்தில் தொங்கிக் கொண்டிருந்த குளவி கூடு ஒன்று, பலத்த காற்றின் காரணமாக கீழே விழுந்ததனால் இந்த அனர்த்தம் ஏற்பட்டதாக தெரியவருகின்றது.
கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் வைத்தியசாலைக்கு நேரில் சென்று, காயமடைந்த மாணவர்களை பார்வையிட்டனர் .
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கிண்ணியா பொலிஸரர் தெரிவித்தனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்