இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் பாரிய தங்கக் கடத்தல்களில் ஈடுபட்டு வரும் குழு தொடர்பான விசாரணைகளை, இந்திய சுங்க அதிகாரிகள் விரிவுப்படுத்தியுள்ளனர்.
இந்திய ஊடகங்களின் தகவல்படி, இந்த கடத்தல்களுக்கு உடந்தையாக இருந்ததாகக் குற்றம் சுமத்தப்படும் இந்திய விமானச் சேவைகள் பிரிவின் உயர் அதிகாரி ஒருவரும் விசாரணைகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
சப்ரி அலி என்ற நபர் தலைமையில் 8 பேர் கொண்ட குழு ஒன்று கடந்த 60 நாட்களில் 167 கோடி இந்திய ரூபாய் பெறுமதியான 267 கிலோ தங்கத்தை இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்குக் கடத்தியுள்ளது.
இந்தக் குழு இந்திய விமான நிலையங்களுக்குள் எவ்விதச் சந்தேகங்களும் இன்றி எவ்வாறு செயற்பட்டிருக்கிறது என்பது தொடர்பான தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்