மன அழுத்தத்தால் தூக்கம் வராமல் தவிக்கின்றீர்களா : உங்களுக்கான தீர்வு

🔥தற்போதைய காலத்தில் நிலவும் பரபரப்பான சூழல் மற்றும் தனிப்பட்ட பல பிரச்சினைகள் காரணமாக நாம் அனைவரும் அதிகளவில் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றோம்.

🔥இந்த மன அழுத்தத்திலிருந்து வெளி வருவதற்காக வைத்தியர்களை நாடுதல் மற்றும் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளுதல் என அதிகளவில் பணத்தையும் நாம் செலவழிக்கின்றோம்.

🔥இந்தநிலையில், இவ்வாறு எவ்வித செலவும் இல்லாமல் இலகுவாக மற்றும் எளிதில் இயற்கையாக மன அழுத்தத்திலிருந்து வெளி வருவதற்கான ஏழு வழிகளை நாம் இந்த பதிவில் பார்க்கலாம்.

1.டிஜிட்டல் டிவைஸ்களுக்கு ஓய்வு கொடுங்கள்

💻மன சோர்வை போக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தொடர்ந்து தொலைபேசி, கணணி, தொலைக்காட்சி, மடிக்கணணி என டிஜிட்டல் ஸ்கிரீன்களை பார்ப்பதை குறைத்து கொண்டு கண்களுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.

💻உங்கள் மனதை ரிலாக்ஸாக வைத்து கொள்வதுடன் ஒருநாள் குறிப்பிட்ட நேரம் வரை டிஜிட்டல் டிவைஸ்களை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும்.

💻இந்த டிஜிட்டல் டீடாக்ஸை தினசரி பின்பற்றுவது மன அழுத்தத்தை குறைக்க மற்றும் ஒட்டுமொத்த அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

2.மெடிடேஷன்

🧎‍♀️தியானத்தின் ஒருவகை மைன்ட்ஃபுல்னஸ் மெடிடேஷன் ஆகும்.நீங்கள் பின்பற்ற கூடிய தினசரி வழக்கத்தில் Mindfulness தியானத்தை சேர்த்து கொள்ளுங்கள.

🧎‍♀️தினசரி சில நிமிடங்கள் உங்கள் சுவாசத்தில் கவனம் செலுத்துங்கள் அத்தோடு உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களை நீக்குங்கள்.

🧎‍♀️இந்த எளிய மற்றும் சக்திவாய்ந்த பயிற்சி மன அமைதியை ஊக்குவிக்கிறது அத்தோடு செறிவை அதிகரிக்க செய்கிறது மற்றும் மனநிலையை பேலன்ஸாக வைத்து கொள்வதற்கு பங்களிக்கிறது.

3.இயற்கை சூழலில் நேரம் செலவிடுங்கள்

🌼பூங்காவில் அல்லது மலை பகுதிகளில் நடைபயிற்சி செல்வது மற்றும் சூரிய உதயம் அல்லது அஸ்தமனத்தை இரசிப்பது என எதுவாக இருந்தாலும் இயற்கை சூழலில் நீங்கள் செலவிடும் நேரம் உங்களது மன அழுத்தத்தை குறைத்து உற்சாகம் மற்றும் புத்துணர்ச்சியாக இருக்க பெரிதும் உதவும்.

🌼பொதுவாக இயற்கையுடன் அதிகம் இணைந்திருப்பவர்கள் தங்களது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பார்கள் என பல ஆய்வுகள் கூறியுள்ளன.

4.நல்ல தூக்கம்

😴தினசரி போதுமான அளவு நன்றாகவும் மற்றும் நிம்மதியாகவும் தூங்குவதற்கு எப்போதுமே முக்கியத்துவம் கொடுங்கள்.

😴இரவு ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தூங்க செல்வது, அதே போல காலை குறிப்பிட்ட நேரத்திற்கு எழுவது என்ற வழக்கத்தை பின்பற்றுங்கள்.

😴நீங்கள் தூங்கும் அறை நிம்மதியாக தூங்க கூடிய சூழலில் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

😴அறிவாற்றல் செயல்பாடு, நினைவக ஒருங்கிணைப்பு மற்றும் உணர்ச்சி ஆரோக்கியம் என பல விஷயங்கள் நன்றாக இருக்க தினசரி தூக்கம் தரமாதாக இருப்பது அவசியம்.

5.ஆரோக்கியமான டயட்

🍗உங்கள் உடலையும் மற்றும் மனதையும் ஆரோக்கியமாக வைத்திருக்க சமசீரான டயட்டை பின்பற்றுங்கள்.

🍗ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்ஸ், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக இருக்கும் வைட்டமின்ஸ் நிறைந்த உணவுகளை உங்களது அன்றாட டயட்டில் சேர்த்து கொள்ளுங்கள்

🍗அதே போல உடலை ஹைட்ரேட்டாக வைத்து கொள்வதும் முக்கியம்.

🍗லேசான டிஹைட்ரேஷன் கூட அறிவாற்றல் செயல்திறனை பாதிக்க கூடும்.

6.கிரியேட்டிவான செயல்களில் ஈடுபடுங்கள்

🎹உங்களது படைப்பாற்றலை தூண்டும் மற்றும் உங்களுக்கு மகிழ்ச்சி தர கூடிய பயனுள்ள செயல்களில் ஈடுபடுங்கள்.

🎺உதாரணமாக கவிதை அல்லது கதை எழுதுவது, ஓவியம் வரைவது மற்றும் இசைக்கருவியை வாசிப்பது போன்ற செயல்பாடுகள் உங்கள் மனநிலையை உற்சாகமாகவும் மற்றும் புத்துணர்ச்சியாகவும் வைத்திருப்பதை ஊக்குவிக்கும்.

🎻மன அழுத்தத்திலிருந்து நிவாரணம் பெற மற்றும் மனதை புத்துணர்ச்சியடைய செய்யும் ஒரு சக்திவாய்ந்த கருவியாக படைப்பாற்றல் இருக்கிறது.

7.பிறருடன் நன்கு பழகுங்கள்

👩🏻‍🤝‍🧑🏻சிலர் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நேரம் செலவிடுவதை தவிர்ப்பார்கள். இது கூட மனஅழுத்தம் அதிகரிக்க காரணமாக இருக்கலாம்.

👩🏻‍🤝‍🧑🏻எனவே நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் உங்களை சுற்றி இருப்பவர்களுடன் உங்களது தொடர்புகளை வளர்த்து நன்றாக பேசி பழக நேரம் ஒதுக்குங்கள்.

👩🏻‍🤝‍🧑🏻நீங்கள் பழகும் நபர்கள் உங்களுக்கு உணர்ச்சி ரீதியான ஆதரவை வழங்கி உங்களது தனிமை உணர்வுகளை குறைப்பார்கள்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்