2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (G.C.E. A/L) பரீட்சைக்கான கால அட்டவணையை பரீட்சைகள் திணைக்களம் இன்று திங்கட்கிழமை வெளியிட்டுள்ளது.
அதன்படி, எதிர்வரும் ஆகஸ்ட் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உயர்தரப் பரீட்சை, செப்டம்பர் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ள கால அட்டவணையின்படி, பரீட்சை 22 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், காலை மற்றும் பிற்பகல் அமர்வுகளில் பாடங்கள் நடத்தப்படவுள்ளன.
பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்கள் கால அட்டவணையை முன்கூட்டியே பார்வையிட்டு, அதற்கேற்ப தங்களது தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.