கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு, புகையிரதத்தில் 25 கிராம் ஜஸ் போதைப் பொருளை வியாபாரத்துக்காக கடத்தி வந்த சந்தேகநபரை, கருவப்பங்கேணியில் வைத்து இன்று திங்கட்கிழமை காலையில் கைது செய்துள்ளதாக, மட்டு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரியந்த பண்டார தெரிவித்தார்
மட்டு தலைமையக பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்கவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, சம்ப தினமான இன்று காலை 7.30 மணியளவில் குறித்த பிரதேசத்தில் உள்ள வீடு ஒன்றை, பொலிஸ் ஊழல் ஒழிப்பு பிரிவு ஜெயசிங்க தலைமையிலான குழுவினர் முற்றுகையிட்டனர்
இதன்போது, கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தில் இருந்து, வியாபாரத்துக்காக ஜஸ் போதைப் பொருள் மட்டக்களப்புக்கு கடத்தி கொண்டு வரப்பட்டு, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்
சந்தேகநபரான 29 வயதுடைய பெண்ணுக்கு 2 பிள்ளைகள் உள்ளதுடன், கணவர் மத்திய கிழக்கு நாட்டில் பணியாற்றி வரும் நிலையில், குறித்த பெண் அண்மைக்காலமாக போதை பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தமை பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து கைது செய்யப்பட்டவரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்ற உத்தரவை பெறும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர்
மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். (Image : AI Generated)