-யாழ் நிருபர்-
யாழில் திருமணமாகி 20 நாட்களே நிறைவடைந்த நிலையில் இளம் பெண் ஆசிரியை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
தம்புவத்தை, ஏழாலை மேற்கு பகுதியில் வசித்து வந்த சபேஸ் பிரவீனா (வயது – 28) என்ற இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு நேற்றையதினம் உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த ஆசிரியை நுவரெலியா மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதுடன் வட்டவல குயில்வத்தை மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றி வந்த நிலையில், யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் திருமணம் செய்துள்ளார்.
அவரை 24 ஆம் திகதி திடீரென அவருக்கு சுகயீனம் ஏற்பட்டது. அவரை வைத்தியசாலையில் அனுமதித்தவேளை எலும்பில் புற்றுநோய் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று முன் தினம் சனிக்கிழமை அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் இன்றையதினம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்