கொழும்பில் ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் நடாத்தப்பட்ட இரண்டு ஸ்பா நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு இரண்டு முகாமையாளர்கள், மற்றும் எட்டு பெண்கள் உட்பட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பாறை, இங்கிரிய, இரத்தினபுரி, நிவித்திகல மற்றும் நாவலப்பிட்டிய பிரதேசங்களில் வசிக்கும் 25 வயதுக்கும் 50 வயதுக்கும் இடைப்பட்ட எட்டு பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஆயுர்வேத மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் மஹரகம வட்டேகெதர மற்றும் பன்னிபிட்டிய தெபானம பிரதேசத்தில் உள்ள இரண்டு ஸ்பா மையங்களில் பெண்களை பணத்திற்கு விற்பனை செய்வதாக கிடைத்த தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்