ஹட்டன்-டிக்கோயா மணிக்கவத்த தோட்டத்தில், தொடர் குடியிருப்பில் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் ஏற்பட்ட தீ விபத்தில், 3 வீடுகள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில் பரவிய தீயை, தோட்டத் தொழிலாளர்கள், பொலிஸ் அதிகாரிகள் இணைந்து கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் .
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த வீடுகளில் வசிப்பவர்களின் தனிப்பட்ட உடமைகள் முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளன.
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஹட்டன் பொலிஸார், மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.










