சம்மாந்துறை பிரதேசத்தில் மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ள அபாயத்தைக் குறைக்கும் நோக்கில், வடிகான்களைத் துப்புரவு செய்யும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர் பணிப்புரைக்கமைய, பிரதேசத்திலுள்ள வடிகான்களைத் துப்புரவு செய்யும் பணிகள் நாளாந்தம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு கட்டமாக, மண் மற்றும் கழிவுகள் நிரம்பி நீரோட்டம் தடைப்பட்டுள்ள வடிகான்களை, வாடகைக்கு அமர்த்தப்பட்ட கனரக இயந்திரங்களின் உதவியுடன் துப்புரவு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மழைநீர் தடையின்றிச் சீராக வடிந்தோடுவதை உறுதிப்படுத்துவதன் மூலம், மழைக்காலங்களில் ஏற்படக்கூடிய வெள்ளப் பாதிப்புகளைக் குறைத்து, பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையையும் உடமைகளையும் பாதுகாப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
எனவே, மழைக்காலத்தை முன்னிட்டு வடிகான்களை முறையாகப் பராமரிப்பதுடன், நீரோட்டத்திற்குத் தடையாக இருக்கும் மண் மற்றும் கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.










