அளுத்கம-கந்தே விகாரையில் பராமரிக்கப்பட்டு வந்த பெண் யானை தாக்கியதில் 33 வயதுடைய சுற்றுலா வழிகாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை காலை விகாரை வளாகத்திற்குள் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அஹுங்கல்ல பகுதியைச் சேர்ந்த குறித்த நபர், யானையின் தாக்குதலுக்கு உள்ளாகிப் படுகாயமடைந்த நிலையில் பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் யானைப் பாகன்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் இடம்பெற்ற சூழ்நிலைகள் தொடர்பில் அளுத்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.










