-யாழ் நிருபர்-
இலங்கைப் பாடசாலை சதுரங்க சம்மேளனத்தினால் நடத்தப்பட்ட தேசிய ரீதியிலான சதுரங்க சுற்றுப்போட்டி அனுராதபுரம் ஸ்வர்ணபாலி மகளிர் மகா வித்தியாலயத்தில் 23,24,25ஆம் திகதிகளில் இடம்பெற்றது.
இதில் 6 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் போட்டியிட்ட யாழ்ப்பாணம் இந்து ஆரம்ப பாடசாலை மாணவன் சிறீஷனாத் தீக்ஷிகன் 7 சுற்றுக்களில் 5ல் அபாரமாக ஆடி (Merit) வெற்றி பெற்றுள்ளார்.
இதன்மூலம் 2027 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள சர்வதேச சதுரங்க போட்டிகளில் இலங்கையை பிரதிநிதிப்படுத்தும் வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான தெரிவுப்போட்டியில் பங்கெடுப்பதற்கான தகுதியை பெற்றுள்ளார்.
குறித்த மாணவன் இதற்கு முன்னரும் பல சதுரங்க போட்டிகளில் தொடர்ச்சியாக பங்கெடுத்து சாதித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.










