நாட்டில் நிலவும் வெள்ளப்பெருக்கு காரணமாக, சப்ரகமுவ மாகாணத்தில் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் அழகியல் பாடங்களுக்கான செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்க முடியாத மாணவர்களுக்கு மாற்றுத் திகதிகள் வழங்கப்படவுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாகப் பரீட்சைக்குத் தோற்ற முடியாத மாணவர்கள், வெள்ள நிலைமை தணிந்த பின்னர் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை நிலையத்திற்குச் சென்று அறிவிப்பதன் மூலம் புதிய பரீட்சைத் திகதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தமது செய்முறைப் பரீட்சைகளில் பங்கேற்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.










